ஒரு ஸ்கூல்ல ஒரு குட்டிப் பொண்ணு இருந்தாளாம்.
உடம்பு சரியில்லாம நாலு நாளைக்கு ஸ்கூலுக்கே போகலையாம்”
“மறுபடி ஸ்கூலுக்குப் போகும் போது அங்க நிறைய பாடம் நடத்திட்டாங்களாம்”
“ஐயோ நிறைய நடத்திட்டாங்களேன்னு அதையெல்லாம் காப்பி பண்ணி எழுதுறதுக்கு, அவளோட பெஸ்ட் ஃபிரெண்ட் கிட்ட நோட்டு கேக்குறா.
ஆனா அவ இன்னைக்கு வீட்ல போய் நான் படிக்கனும் அப்படிண்ட்டு சடாருன்னு சொல்லிட்டாளாம்.
நோட்டு கொடுக்கலையாம்”
“அப்ப அவ நோட்ல காப்பி பண்ணலையா”
“ஆனா இன்னொரு பொண்ணு அவளே வந்து நோட்டு கொடுத்து ஹெல்ப் பண்ணினாளாம்”
“நாம பெஸ்ட் பிரெண்டா நினைச்சவ நமக்கு உதவி செய்யாம போயிட்டாளேன்னு இந்த பொண்ணுக்கு வருத்தம்.
எத்தன நாள் அவளுக்கு சாக்லேட் கொடுத்திருப்போம். எத்தன நாள் அவளுக்கு கலர் பென்சில் கொடுத்திருப்போம்.”
“இதுமாதிரி அவ செய்தத எல்லாம் நெனச்சு பாத்தாளாம். மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சாம். அழுகையா வந்துச்சாம்.ஒரே obsession னா இருந்துச்சாம்”
“obsession ன்னா”
“ஒரே எண்ணம் திரும்ப திரும்ப வந்துட்டே இருந்தா அதுதான் அப்சசெஷன். அது மாதிரி அவளுக்கு அவ தோழி நோட்டுக் குடுக்காம இருந்தது பத்தியே நினைச்சிட்டு இருந்தாளாம்.
மதியானம் லஞ்ச கூட சரியாவே சாப்பிடலையாம். வீட்டுக்கு வந்து முகத்த உம்முன்னே வெச்சிட்டு இருந்திருக்கா.
அவளால சரியா பேச முடியல, டிவி பாக்க முடியல, சிரிக்க முடியல அன்னைக்கு நைட் முழுசும் அதையே நினைச்சிட்டு சரியா தூங்க முடியல. மறுநாள் ஸ்கூல் லீவு. லீவுன்னா வழக்கமா ஜாலியா இருப்பா?
ஆனா அன்னைக்கு அவளால எதுவும் செய்ய முடியல”
“அன்னைக்கு எல்லோரும் ஒரு பார்க்குக்கு போறாங்க. அந்த பொண்ணோட அப்பா அவள ஊஞ்சல்ல உட்கார வெச்சி தள்ளி விடுறாங்க. ஒரே தள்ளு. ஊஞ்சல் மேலையும் கீழையும் வேகமா ஆடுது. இந்தப் பொண்ணுக்கு ஜாலியா இருக்கு.
ஹோய் ஹோய்ன்னு கத்துறா. ரொம்ப தள்ளாதீங்கப்பான்னு சிரிச்சிகிட்டே சத்தமா சொல்றா. அவ அப்பா கேக்கல.
இன்னும் இன்னும் தள்ளி விட்டுகிட்டே இருக்காரு. அரைமணி நேரம் ஊஞ்சல்ல ஆடிட்டு இறங்கி இன்னும் நிறைய விளையாட்டு விளையாடுறா”
“அவ பிரெண்ட் மேல வருத்தமா கோபமா இருக்கிறத மறந்து போயிர்ரா. நிம்மதியாகிட்டா”
“அன்னைக்கு நைட்டு அவ தூங்கும் போது இந்த பாயிண்ட்ஸ எல்லாம் யோசிக்கிறா.
பாயிண்ட் நம்பர் 1 : எனக்கு நோட்டுக் கொடுக்காதது அவ தப்பு.அதுக்கு நா ஏன் சாப்பிடாம சிரிக்காம சந்தோஷமா இல்லாம இருக்கனும்.
பாயிண்ட் நம்பர் 2: ஒருவேளை அவளுக்கு உண்மையிலேயே அன்னைக்கு படிக்க
இருந்திருக்கும்.அதனால கொடுக்காம இருந்திருக்கலாம்.
பாயிண்ட் நம்பர் 3: என் பிரெண்ட் மேல கோபம்னா அதுக்கு எனக்கு ரொம்ப பிடிச்ச அப்பா அம்மாகிட்ட எல்லாம் உம்முன்னு இருந்தேன்.
பாயிண்ட் நம்பர் 4 : ஒருத்தர் மேல உள்ள எரிச்சல கோபத்த எப்பவும் நினைக்கிறது எவ்வளவு கொடுமையா இருக்கு. வேற வேலையே செய்யமுடியலையே.
பாயிண்ட் நம்பர் 5: அவ மேல உள்ள கோபத்த எரிச்சல அஞ்சு நிமிசம் கூட மறக்கனும்னு நா ஏன் நினைக்கல.
இதோ இன்னைக்கு ஊஞ்சல்ல வேகமா ஆடும் போது அந்த பரபரப்புல அவள மறந்தேன். அப்படியே மறந்துட்டு ஜாலியா இருக்கேன். ஏன் கொஞ்சம் கூட ஒரு பிரச்சனையில இருந்து வெளிய வரணுமுன்னு நான் நினைக்கல.
இப்படி பல பாயிண்ட யோசிச்சி ஒரு முடிவுக்கு வர்றா. என்ன முடிவுக்கு வர்றா?
“யாருப்பத்தியும் நெகட்டிவ்வா நினைச்சிகிட்டே இருந்தா நிம்மதியா இருக்க முடியாது. அது நம்ம எனர்ஜிய இழுத்துரும்.
அதனால நம்ம லைஃப ஜாலியா அனுபவிக்க முடியாம போயிரும். அதானால இனிமே ரொம்ப பிரெண்ட்லியா இருக்கனும்ன்னு முடிவு பண்ணிட்டு
பிரிஸ்கா எந்திரிக்கிறா
பிரிஸ்கா அம்மா அப்பாவுக்கு காலை வணக்கம் சொல்றா
பிரிஸ்கா குளிச்சி யூனிஃபார்ம் போட்டுக்குறா
பிரிஸ்கா இட்லியும் வெங்காயச் சட்னியும் வெச்சி சாப்பிடுறா
பிரிஸ்கா பேக் எடுத்துட்டு
பிரிஸ்கா கிளம்பும் போது அவ முகத்துல சூரிய ஓளி அடிக்குது.
அவ முகம் இன்னும் தெளிவா அழகா அந்த சூரிய ஒளியில தெரியுது.
நமது எண்ணங்கள் நன்றாக இருந்தால்தான்
நமது செயல்கள் நன்றாக இருக்கும்.
நமது செயல்கள் நன்றாக இருந்தால்தான்
நமது வாழ்க்கை நன்றாக இருக்கும்.
Ultimate Guides on Earn Money Online:
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
No comments:
Post a Comment
Comment usefully. Comments are checked for spam.