காய்த்த மரம்தான் கல்லடி படும் அருமையான அனுபவமொழி


காய்த்த மரம்தான் கல்லடி படும்.

அருமையான அனுபவமொழி..

ஒரு மரம் காய்த்திருந்தால் மட்டுமே பிறரைத் 
திரும்பிப் பார்க்க வைக்கும்.

மொட்டையாய் ஒரு மரம் நின்று கொண்டிருந்தால்
யாருமே சட்டை செய்வதில்லை.ஏதோ ஒரு மரம் நிற்கிறது அவ்வளவுதான்.அதற்கு மேல் அந்த மரத்தை யாரும் அண்ணாந்து பார்ப்பதில்லை.
மரத்தில் காய், கனிகள் காய்த்துக் கிடக்கும் போதுதான் அனைவரையும் 
அண்ணாந்து பார்க்க வைக்கும்.அதன் பலன் நமக்கும் சிறிதாவது கிடைக்காதா என்ற ஆவலில் கல்லெடுத்து வீச வைக்கும்.

வண்டுகளும்,
தேனீக்களும் 
பட்டாம்பூச்சிகளும் சுற்றி சுற்றி பறந்து வரும்.
மரத்திலிருந்து நமக்கும் ஏதாவது கிடைக்காதா என்று ஏங்க வைக்கும்.
அந்த ஏக்கம் தொட்டுப் பார்க்கத் தூண்டும்.

வழிப்போக்கர்கள் கண்களை எல்லாம்
உறுத்தும்.அந்த உறுத்தல் கைகளில் கல்லை எடுத்து வீச வைக்கும்.
கிடைத்தால் லாபம். இல்லை என்றால்
மறுபடியும் வீசிப் பார்ப் போம் என்று தொடர்ந்து வீச வைக்கும்.எதுவரை காய், கனிகள் இருக்கிறதோ அது வரை கல் வந்து விழத்தான் செய்யும்.

இது உலக இயல்பு.

தயார் படுத்திக் 
கொண்டே இருந்தால்
விமர்சனங்கள் ஒரு போதும் நம்மைக் காயப்படுத்தி விடாது.

போற்றுவார் போற்றட்டும்
புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்.

நான் என் கடமையை உண்மையாய்  செய்து
கொண்டே இருப்பேன்.

என் உழைப்பை ஒரு போதும் யாருக்காகவும் எதற்காகவும் நிறுத்தப்
போவதில்லை என்று நதி போல நில்லாமல் ஓடிக்
கொண்டே இருக்க வேண்டும்.

காய்த்த மரம் கல்லடி படத்தான் செய்யும்.

தவறுகள் சுட்டிக்காட்டப் பட்டால் திருத்திக் கொள்ளும் மன பக்குவம் 
இருக்க வேண்டும்.

விமர்சனங்களைப் பரிசீலனை செய்து
நல்லவற்றை எடுத்துக் கொண்டு, தவறுகளைத்
திருத்திக் கொண்டால் மட்டுமே வெற்றியாளராக முடியும்.

நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *