கதை: சிரியாவில் பள்ளியில் நடந்த உண்மைச் சம்பவம்


சிரியாவிலுள்ள ஒரு பள்ளியில் நடந்த உண்மைச் சம்பவம்.

அற்புதமான ஒரு நிகழ்வு இது.

ஓர் ஆசிரியை பாடவேளையின் இறுதியில் மாணவிகளை ஊக்குவிக்க சிறிய தேர்வை நடத்தினார்.

அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு ஜோடி காலணி வழங்கப்படும் என்றும் கூறினார்.

அனைத்து மாணவிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினர்.

இறுதியில் அவர்களது விடைகளை பரிசீலித்துப் பார்த்த பொழுது அவர்கள் அனைவரும் சரியான விடைகளை எழுதி இருந்தனர்.

ஆசிரியை யாருக்குப்பரிசினை வழங்குவது என்று சிந்தித்து விட்டு ஒரு பெட்டியில் அனைவரும் அவரவர் பெயர்களை ஒரு தாளில் எழுதி சுருட்டிப்போடுமாறு சொன்னார்.

அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை அப்பெட்டியைக்குலுக்கி அதில் ஒரு தாளை எடுத்தார்.

அதில் "வஃபா" என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.

அம்மாணவி தான் அவ்வகுப்பில் மிகவும் ஏழ்மையான மாணவி. பல காலமாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த அம்மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி.

பின்னர் அவ்வாசிரியை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்து நடந்த நிகழ்வைப்பற்றி கணவரிடம் கண்ணீருடன் கூறினார். கணவனும் மகிழ்ச்சி அடைந்தார்.

எனினும் அவ்வாசிரியை வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.

கணவர் மீண்டும் காரணம் கேட்க " நான் வீட்டுக்கு வந்து பெயர்கள் இடப்பட்ட அப்பெட்டியில் இருந்த தாள்களைப்பிரித்து பார்த்தேன். அதில் அனைத்து மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை மாணவியாக இருந்த "வஃபா" வின் பெயரையே எழுதியிருந்தனர்". என்று
கண்ணீருடன் பதிலளித்தார்.

"தன்னை விட அதிகம் தேவையில் உள்ள பிறர் மீது அக்கறை கொண்டு அவர்களை முன்னிலைப்படுத்தும் பிள்ளைகளாக நமது பிள்ளைகளை வளர்ப்பது  நமது கடமையாகும்"

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *