சில எழரை புடிச்ச அம்மாவும் தங்கைகளும் இப்படி இருக்காங்க


நண்பர் அரசாங்க ஊழியர், அவர் மனைவியும் அரசாங்க ஊழியர். நண்பருக்கு 2 தங்கச்சி.

நண்பரோட அம்மா பேருல 4 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு, ஒரு வீடு இருக்கு, அப்பா பேருல 4 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு, ஒரு வீடு இருக்கு. மொத்தம் 8 ஏக்கர் நிலமும் குத்தகைக்கு விட்டு இருந்தாங்க.

நண்பருக்கு கலயாணம் ஆச்சி, தங்கைகளுக்கும் கல்யாணம் ஆச்சி, அப்போ குடும்பதுக்குள்ள பேசி ஒரு முடிவு செஞ்சி இருக்காங்க, என்னனா? 2 வீடு இருக்கு, அதை தங்கச்சிகளுக்கு ஆளுக்கு ஒரு வீடு குடுத்துடலாம், பையனுக்கு அப்பா அம்மா பேருல இருக்குற 8 ஏக்கர் விவசாய நிலமும் குடுத்துட்டுல்லாம்னு.

ஏன் அப்படி முடிவு செஞ்சாங்கன்னா? நண்பர் பொண்ணு கட்டி இருக்குற வீடு ஒரே பொண்ணு, மாமியார் பேருல ஒரு வீடு இருக்கு, 2 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு, மாமனார் இல்லை, எப்படியும் அந்த வீடு நண்பருக்கு தானே வர போகுது, அப்படினு இவங்க கிட்ட இருக்குற வீட்டை தங்கச்சிங்களுக்கு ஆளுக்கு ஒரு வீடு குடுக்கலாம்னு பேசி முடிவு பண்ணி, 2 வீட்டையும் ஆளுக்கு ஒரு வீட்டை பத்திரபதிவு செஞ்சி குடுத்துட்டாங்க.

கொஞ்ச நாள்ல மாமியார் மருமகள் பிரச்சனை ஆரம்பிச்சிடிச்சி, இந்த பிரச்சனைகளுக்கு நடுவுல நண்பருக்கு ரெண்டு ஆண் குழந்தையும் பிறந்தது.

வேலைக்கு போகும் ஆகாத மருமகள், பேரப்பிள்ளை பாத்துக்க வேண்டிய சூழ்நிலை, கொஞ்ச நாள்ல மாமியார் மருமகள் பிரச்சனை முத்தி போச்சி, இதுக்கு மேல ஒன்னா இருக்க முடியாதுனு நண்பருக்கு ஒரு அளவுக்கு புரிஞ்சி போச்சி, நண்பரும் எவளோ சமாளிச்சு பாத்தார், ஒன்னும் வேலைக்கு ஆகல, இதுல ஜெயிக்கிற ஆம்பள ரொம்ப கம்மி.

நண்பரோட மாமியாருக்கு ஒரு சொந்த வீடு இருக்கே, அங்க போயிட்டாங்க நண்பரும் அவர் மனைவியும், பிள்ளைகளும்.

சும்மா ஆடும் ஆத்தாக்காரிக்கு கால்ல சலங்கை கட்டி விட்டது போல ஆகிடிச்சி, பையன் மாமியார் வீட்டோட போனது.

கொஞ்ச நாள்ல நண்பரோட அப்பாவும் இறந்து போயிட்டார், இதுக்கு நடுவுல மாமியார் மருமகளுக்குள்ள சுத்தமா பேச்சி வார்த்தை இல்லாம போயிடிச்சி, புள்ளை பிரிஞ்சி தனியா போனதும், நண்பரோட அம்மா போயி பொண்ணுங்க வீட்ல செட்டில் ஆகிடிச்சி. அண்ணிக்கு.... அம்மா கிட்ட பேச்சி வார்த்தை இல்லமா போனதும், 2 பொண்ணுங்களுக்கு சொல்லவா வேணும்? எரியிற தீயில நல்லா எண்ணெய் ஊத்தி விட்டுட்டாங்க. நண்பர் மட்டும் அடிக்கடி தங்கச்சி வீட்டுக்கு போயி அம்மாவை பாத்துட்டு வருவார்.

8 ஏக்கர் குத்தகை பணம்னு பையன் கண்ணுல ஒரு ரூபாய் கூட காட்டாது ஆத்தாகாரி, வருஷ வருஷம் ஏதோ ஒரு செலவு கணக்கு சொல்லி, நண்பர் கிட்ட காசு குடுத்ததே இல்ல அம்மா, நண்பரும் சரி அம்மா தானே? அந்த காசு வந்து நமக்கு ஒன்னும் ஆக போறது இல்ல, நாமளும் நம் மனைவியும் நல்ல சம்பளம் வாங்குறோமேனு விட்டுடுவார்.

ஆனா பொண்டாட்டி அப்படி விடுவாளா? உங்க அம்மா எல்லா காசும் உங்க தங்கச்சி தான் தராங்க, வருஷ வருஷம் ஏதோ ஒரு செலவு கணக்கு சொல்றாங்க உங்க கிட்டனு புருஷன் பொண்டாட்டிக்குள்ள அடிக்கடி சண்டை வரும்.
கூட நண்பரோட மாமியார் வேற இருக்கு, சொல்லவா வேணும்? பொண்டாட்டியும் மாமியாரும் சேந்து அடிச்சா, ஒரு ஆம்பள எப்படி சமாளிப்பான்?

அந்த 8 ஏக்கர் நிலம் நண்பர் பேருக்கு இன்னும் பத்திரம் ஆகல, அம்மா அப்பா பேருலயே இருக்கு, என் பேருக்கு பத்திரம் பண்ணி குடுங்கன்னு நண்பர் கேட்டுகிட்டே இருக்கார் இதோ அதோனு இழுத்தடிச்சிக்கிட்டே இருந்தாங்க, நண்பர் பேருக்கு பத்திரபதிவு பண்ணனும்னா? அம்மா & 2 தங்கச்சியும் கையெழுத்து போடணும்.

இப்படியே போயிக்கிட்டு இருக்கும் போதும், 3 வருஷம் முன்னாடி வந்த புயல்ல, சேதாரம் ஆனா விவசாய நிலத்துக்கு நிவாரணம் தராங்கனு நண்பர் நிவாரணம் வாங்கலாம்னு போயி இருக்கார், அப்போ சிட்டா அடங்கல் வாங்கிட்டு வாங்கனு சொல்லி இருக்காங்க.

நண்பர் VAO ஆபீஸ்ல சிட்டா அடங்கல் வாங்க போயி இருக்கார், அப்போ தான் அவருக்கு தெரிய வருது, அம்மா பேருல இருந்த 4 ஏக்கர் நிலம் தங்கச்சிகளுக்கு ஆளுக்கு 2 ஏக்கர் பத்திரபதிவு செஞ்சி குடுத்து இருக்கு ஆத்தாக்காரினு. அதுவும் 2 வருஷம் முன்னாடியே.

அம்மா இப்படி செஞ்சது தெரிஞ்சா எப்படி இருக்கும் பையனுக்கு? எவளோ பெரிய துரோகம் செஞ்சி இருக்கு அந்த அம்மா.

இந்த விஷயத்தை போயி பொண்டாட்டி கிட்ட சொன்னா என்ன ஆகும்?

ஆத்தாக்காரி தான் இப்படி செஞ்சான்னா? 2 தங்கச்சிக்கு எங்க போச்சி அறிவு? தங்கச்சிய கட்டிக்கிட்டானுங்களே 2 பேரு அவனுங்க கூட கமுக்கமா இருந்து இருக்கானுங்க, கொடுமை என்னனா? இந்த 2 வருஷமா அண்ணன் கிட்ட பேசிகிட்டு பழகிக்கிட்டு தான் இருக்காளுங்க 2 தங்கச்சியும், தங்கச்சி புருஷங்களும்.

இந்த சம்பவம் நண்பருக்கும் அவர் மனைவிக்கும் பெரிய சண்டையே நடந்துச்சி.

ஊருல 4 பெரியவங்களை கூட்டி பஞ்சாயத்து வெச்சி, அப்பா பேருல இருக்குற 4 ஏக்கரையும் ஆட்டைய போட்டுட போறாங்கனு நண்பர் பேருல பத்திரபதிவு செஞ்சி முடிச்சாங்க.

பஞ்சாயத்துல ஆத்தாக்காரி என்ன சொல்லிச்சி தெரியுமா? என்ன அம்போனு விட்டுட்டு மாமியார் வீட்டோட போயிட்டான், என் பொண்ணுங்க தான் என்ன பாத்துக்கிட்டாங்கனு சொல்லிச்சி, இந்த வார்த்தை செமயா எடுபட்டுச்சு பஞ்சாயத்துல.

நிலம் எல்லாம் அண்ணனுக்கு சொல்லி ஆளுக்கு ஒரு வீட்டையும் ஆட்டைய போட்டுட்டு, ஆளுக்கு 2 ஏக்கர் நிலத்தையும் அடிச்சிக்கிட்டு போயிடிச்சிங்க, 2 தங்கச்சியும்.

இதுவே நண்பரோட அப்பா உயிரோட இருந்து இருந்தா, இந்த 3 பொம்பளைங்க சேந்து இவளோ ஆட்டம் போட்டு இருப்பாங்களா? செவுல்ல 2 அப்பு அப்பிட்டு மூடிக்கிட்டு இருங்கடீனு சொல்லி இருப்பார்.

கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி என் புள்ள, என் புள்ளனு உருகுவாளுங்க, இந்த ஆத்தாக்காரிங்க, கடைசில நம்ப வெச்சி கழுத்தை அறுத்துடுங்க.

எப்போவுமே பையனை திட்டிகிட்டே இருந்தாலும், கோவத்தை வெளிப்படுத்துக்கிட்டே இருந்தாலும், அப்பா எப்போவும் இப்படி ஒரு காரியத்தை செய்யமாட்டார்.

எல்லா அம்மாவும் இல்ல, நிறைய அம்மாக்கள் மருமகளை சீண்டினா நம்ம பையன் தான் disturb ஆவான்னு புரிஞ்சிகிட்டு பக்குவமா நடந்துப்பாங்க. ஏன் சில எழரை புடிச்ச அம்மாவும் & தங்கைகளும் இப்படி இருக்காங்க?

பின்குறிப்பு :
தங்கச்சி இடத்துல இருக்குறவங்களுக்கு கோவம் வரும், டென்ஷன் ஆகும்.

அண்ணி இடத்துல இருக்குறவங்களுக்கு யார் டா இவன் நேர்ல பாத்தா மாதிரி சொல்றானேனு இருக்கும்.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *