கதை: பயம் பாதி கொல்லும்


ஒரு காட்டில் முனிவர் தவம் இருந்தார், அப்போது அந்த வழியக் ஒரு நோய் போய்க்கொண்டிருந்தது அதன் பெயர் காலரா...!

முனிவர் நோயை கூப்பிட்டு எங்கே போகிறாய் என கேட்டார்,
தமிழ் அறிவு கதைகள்
பக்கத்து ஊரில் திருவிழா நான் அங்கு சென்று எல்லாருக்கும் காலராவை
பரப்பி விட்டு காலராவினால் கொல்லபோகிறேன் என்றது.

இது பாவம் இல்லையா என முனிவர் கேட்க, அப்புறம் ஏன் என்னை இறைவன் படிக்கவேண்டும் என நோய் கேட்டது

சரி என்று கூறிவிட்டு வெறும் 100 பேரை மட்டும் கொல், அதற்க்கு மேல் உயிர்பலி ஏற்பட்டால் ஏன் சாபத்திற்கு ஆள்வாய் என முனிவர் கூறி அனுப்பினார்

ஆனால்  காலராவினால் உயிர் பலி 2000 ஆக உயர்ந்துவிட்டது.

முனிவருக்கு கோபம், நோயை அழைத்து ஏன் இப்படி செய்தாய் ஏன் கேட்டார்!

நான் கொன்றது 100  பேர் தான் மற்றவர்கள் அனைவரும் பயத்தினால் இறந்தவர்கள்!! நான் என்ன செய்யமுடியும் முனிவரே!...!

பயம் பாதி கொல்லும்!

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *