பில் கேட்ஸ் ஒரு அசாதாரண மனிதர்


பணக்காரர்களுக்கு அனுபவரீதியாக தெரிந்த எந்த ஒரு விஷயம் நடுத்தர மக்களுக்கும் பயன்படும்?

பில் கேட்ஸ் தனது மூன்று குழந்தைகளும் தலா 10 மில்லியன் டாலர்களை தன் சொத்தில் இருந்து அவர்களது பங்காக பெறுவார்கள் என்று பகிரங்கமாக அறிவித்தார்.

சரி, இப்போது அது நிறைய பணம் தானே? என்று நீங்கள் யோசித்தால் இது பில் கேட்ஸின் பல பில்லியன் டாலர் செல்வத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே

பில் கேட்ஸின் சொத்து மதிப்பு சுமார் 115 பில்லியன் டாலர்கள்!

இதை பூஜ்ஜியங்களுடன் பார்க்கவும்:

$ 115,000,000,000

$ 10,000,000 உடன் ஒப்பிடுக!

ஒவ்வொரு குழந்தையும் அவரது சொத்தில் 10/115,000 = 0.0087% மட்டுமே தனது பங்காக பெறுகிறது.

மூன்று குழந்தைகளும் தலா 130 மில்லியன் டாலர் மதிப்புள்ள வீட்டில் வாழ்கின்றனர்; அவர்கள் இந்த பணத்தை வைத்து தங்களது வீட்டைக் கூட பராமரிக்க முடியாது

பில் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஏன் இப்படி ஒரு முடிவு செய்தார்கள்?

ஏனென்றால், அவர்கள் தங்கள் குழந்தைகள் சொந்த முயற்சியில் உழைக்காமல் ஒரு சோம்பேறியாக இருப்பதை விரும்பவில்லை!

அவர்களின் சொந்த வார்த்தைகள் இங்கே:

"அவர்கள் தாங்கள் விரும்பும் தொழிலை செய்ய கூடிய சுதந்திரத்தை அடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஆனால் நிறைய பணத்தை கொடுத்து விட்டால், அதன் காரணமாக எதுவுமே செய்யாமல் இருக்கும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது" என்று பில் கேட்ஸ் ஒரு TED பேச்சின் போது விளக்கினார்.

அவருடைய மற்ற சொத்துக்கள் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

பணக்காரர்களுக்கு அனுபவரீதியாக தெரிந்த எந்த ஒரு விஷயம் நடுத்தர மக்களுக்கும் பயன்படும்?

இப்போது உங்கள் கேள்விக்கு பதில்:

"பணம் மக்களைக் கெடுக்கிறது"

பில் கேட்ஸ் ஒரு அசாதாரண மனிதர் என்பதை பல வழிகளில் நிரூபித்துள்ளார். இது அதில் ஒன்று.

இது முன்மாதிரியான குடும்பம்!

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *