கதை: அழகும் அவலச்சணமும் கடைகரையில் சந்தித்து கொண்டன


ஒரு நாள் அழகும் அவலச்சணமும் ஒரு கடைகரையில் சந்தித்து கொண்டன

நாம் இருவரும் சேர்ந்து கடலில் குளிக்கலாமா என்று அழகு கேட்க அவலட்சணமும் ஒப்புகொண்டது. உடைகளை கடற்கரையில் வைத்துவிட்டு குளிக்க சென்றன

சிறிது நேரம் கழித்து குளித்தது போதும்னு அவலட்சணம் கரையேறியது, அங்கிருந்த அழகின் உடைகளை அணிந்தது கொண்டு அவலட்சணம் தன் வழியே சென்றது

பின்னர் குளித்து திரும்பிய அழகு தன் உடைகளை காணமல் தவித்து போனது. ஆடையில்லாமல் தெருவில் போக கூச்சமாக இருந்தது, எனவே வேறுவழி இல்லாமல் அவலச்சணத்தின் உடைகளை அணிந்து கொண்டு சென்றது.

அன்று முதல் இன்று வரை உலகத்தில் பலரும் ஆடையை வைத்து அழகையும் அவலச்சணத்தையும் தவறாக முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிலர், நிஜமான அழகை அடைந்தவர்கள், அதன் அசிங்கமான ஆடைகளை பார்த்து முகம் சுளித்து அதை ஒதுக்கி விடுகிறார்கள். வேறு சிலர் அழகின் உடைகளில் மயங்கி அவலச்சணத்தை கொண்டாடி கொண்டிருகிறார்கள்.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *