மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு நொந்து போவதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்


மற்றவர்களோடு  ஒப்பிடலாமா 
யாரையும் யாருடனும் ஒப்பிடாதீர்கள்: வெறுமனே ஒப்பிடுவது வாழ்க்கைக்கு உப்பிடாது.

மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டு நொந்து போவது - தாழ்வு மனப்பான்மை 

ஒப்பிட்டு கர்வப்படுவது உயர்வு மனப்பான்மை.

மற்றவர்களோடு தினம் தினம் தன்னை ஒப்பிட்டு ஒப்பிட்டு மனதைச் சிறுமையின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றால் அது பொறாமையாகவும், வெறுமையின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றால் அது ஆதிக்க குணமாகவும் மாறும்.

சிறு குழந்தைகள் போல் குதூகலமாக ஆடிப்பாடி களித்திருப்பது வாழ்க்கையின் பாதிப் பகுதியை கடந்த சிலருக்கு இயலாமல் போகலாம். 

ஆனால்,அப்படி ஆனந்தமாகச் செய்வது எதுவாக இருந்தாலும் அதில் மன மகிழ்ச்சியோடு நேரத்தை செலவிடுவது சிலருக்கு மிகச் சாதாரண ஒன்று.

எப்படி இவர்களால் மட்டும் இப்படி இருக்க முடிகிறது.?
படுக்கையில் வந்து விழுந்தவுடனே, இவர்கள் நன்றாகத் தூங்க ஆரம்பித்து விடுவர்கள். இது எல்லோராலும் முடியாதது. 

அப்படியும், இப்படியும் புரண்டு கொண்டு சதா ஏதாவது சிந்தனையில் உழன்று கொண்டு தூங்கும் நேரத்தைச் செலவிடுவார்கள் நம்மில் பலர்.

மனதை இலகுவாக வைத்துக் கொள்வதனாலேயே இப்படிப் படுக்கையில் சாய்ந்ததும் தூங்கும் நிலையைச் சிலர் பெறுகிறார்கள்.

எல்லா செயல்களையும் உணர்ச்சிவசமாகப் பேசி முடிவெடுப்பது பலரின் இயல்பான குணம். 

இதனால் அப்படி எடுக்கும் முடிவுகள் மிகச் சரியானதாக அமைவதில்லை பல சந்தர்ப்பங்களில்.

சிலர் நம்மிடம் வந்து மற்றவர்களின் குறைகளைச் சொல்லி முறையிடும் போது, அவர்களுக்கு ஒன்றை 
எடுத்துச் சொல்ல வேண்டும்..

" உங்களை 
அளவுகோலாக வைத்து மற்றவர்களை எடை போடாதீர்கள் என்று "

எல்லோரும் ஒரே மாதிரியான எண்ணங்கள் கொண்டு இருப்பதில்லை. அப்படி இருந்து விட்டால் இவ்வுலகில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. 

அதேபோல நாமும் மற்றவர்களைப் போல் ஆக முடியாது என்று உணரும் போது, அடுத்தவரின் செயலில் இருக்கும் குறைகள் நமக்குப் பெரிதாகத் தெரியாது.

எது குறை? எது நிறை என்பது உங்களுக்கு மாத்திரமே பொருந்தும். 

உங்களுக்கு மாத்திரமே பொருந்தும் கருத்துக்களைக் கொண்டு 
மற்றவர்களின் குறை, நிறைகளை அளக்க ஆரம்பிக்கும் போது தான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.

*ஆம்.,நண்பர்களே..,*

மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு நொந்து போவதற்கு இன்றில் இருந்து ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *