ஆரோக்கியத்தின் முதல்படி கழிவு நீக்கம்தான்


சுமார் 40வயதுள்ள ஒருவர் தலைவலிக்கு தீர்வு தேடி வந்தார். எல்லா ஸ்கேனும் பார்த்து விட்டேன். அனைத்தும் நார்மல். பல மருத்துவர்களை சந்தித்தும் பலனில்லை. காரணம்  தெரியவில்லை என சொன்னார்.அரைமணிநேரம்  அமைதியாக  ரிலாக்ஸ் ஆக இருக்க  வைத்தேன்
தீராத தலைவலி…!!! தீரும் வழி…!!!

பின்னர் மைக்ரோ சர்க்குலேசன் டெஸ்ட்  செய்தேன்.  அவரது மூளைப்பகுதியில்  ரத்தக்குழாயில் ஒரு கிருமி  ஓய்வில் இருந்தது. மூளைக்குள் கிருமியா என ஆச்சரியத்துடன்  பார்த்தார். மைக்ரோஸ்கோப் லைட்   வெப்பம் அதன்மீது படப்பட அக்கிருமி அசையத் தொடங்கி வேகமாக நெளிந்தது. அதுவரை இல்லாத தலைவலி  இவருக்கு வர துவங்கியது. தலைவலிக்கு காரணம் மூளைக்குள் இருக்கும் இக்கிருமியே என உறுதியானது..

 நேரடியாக பார்த்த பின் அவர் அதிர்ச்சி அடைந்தார்.சிறிதுநேரம் கழித்து  வயிற்றுக்குள் கிருமிகள் இருக்கும் என்பதை அறிவேன். மூளையில் எப்படி சார் கிருமி இருக்கிறது என்றார்.

 வயிற்றில் பெரும்பாலும் பெருங்குடல் பகுதியில் தான்  கிருமிகள் இருக்கும். அவைகள் முட்டையிடும். அம்முட்டைகள்  ரத்தத்தில் கலந்து ரத்த ஓட்டத்தில் உடல் முழுவதும் பரவுகிறது.  அவ்வாறு  செல்லும் போது  ஓரிடத்தில் தங்கி வளர்கிறது. என விளக்க மளித்தேன்.

 பின்னர் அவரது வயிற்று பகுதியை ஸ்கேன் செய்த போது அங்குள்ள கிருமிகளைக்  கண்டு  பயந்தே. போய்விட்டார்.. பின்னர் அமிர்த செந்தூர மருந்துணவுகளை  எடுத்துக்கொண்டார். தற்போது தலைவலியிலிருந்து விடுதலை பெற்று வாழ்கிறார்...

"நாளுக்கு இருமுறை

வாரத்துக்கு இருமுறை

மாதத்துக்கு இருமுறை

வருடத்துக்கு இருமுறை"

என்பது நமது வாழ்வியல் முறையாகும்.. 

வருடத்துக்கு இருமுறை குடல் சுத்தம் செய்ய வேண்டும்.

 அதற்கு  விளக்கெண்ணய்  குடிக்க வைப்பார்கள். பேதியாகி குடல் சுத்தமாகும்.  இதை  கைவிட்டு விட்டோம்.

கிருமிகளுக்கு மிகவும் பிடித்த உணவு இனிப்பு. இனிப்பு கடைகள் பெருகிவிட்டன. உணவுமுறை மாறிவிட்டது. மலச்சிக்கலால் அனைவரும் பாதிப்புக்குள்ளாகி  அவதியுறுகின்றனர். கிருமிகளோ அதிவேக வளர்ச்சி பெற்று ஆரோக்கியத்தை கெடுக்கிறது.

ஆரோக்கியத்தின்  முதல்படி கழிவு நீக்கம்தான்.  அமிர்த செந்தூர மருந்துணவுகள் உடலில் பல ஆண்டுகளாக  தேங்கி யுள்ள  அனைத்து வகை கழிவுகளையும்

மலம், சிறுநீர், சளி, வேர்வை, வழியாக வெளியேற்றி உடல் ஆரோக்கியத்தை பேணி நோய்களை நீக்கி  பாதுகாக்கிறது.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *